ஆசியான் கோப்பை ரேஸ்: 4 இந்தியர்கள் பங்கேற்பு

ஆசியான் கோப்பை ரேஸ்: 4 இந்தியர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

11-வது யமஹா ஆசியான் கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் (ரேஸ்) இந்தியா வில் இருந்து 4 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டுக்கான ஆசியான் கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள சென்டுல் இண்டர்நேஷனல் சர்க்கியூட்டில் வரும் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பிலிப்பைன்ஸ், இந்தியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து மொத்தம் 72 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளில் நடைபெற்ற தகுதிச்சுற்றின் மூலம் ஆசியான் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்தியாவின் சார்பில் ஜெகன்குமார், தீபக் ரவிக்குமார், பத்மநாபன், ரஜினி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்கள் எஸ்டிஆர்15, எஸ்டிஆர்25 என இரு பிரிவுகளில் பங்கேற்கிறார்கள். இவர்கள் 4 பேரும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆர்15 ஒன் மேக் ரேஸ் சாம்பியன்ஷிப் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக யமஹா மோட்டார் இந்தியா நிறுவன துணைத் தலைவர் (ஸ்ட்ரேட்டஜி மற்றும் திட்டமிடல்) ரவீந்திர் சிங் பேசுகையில், “இந்த முறை இந்தியாவில் நடத்தப்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் 4 வீரர்கள் அடையாளம் காணப்பட்டு ஆசியான் கோப்பை போட்டிக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in