Last Updated : 10 Aug, 2016 09:21 AM

 

Published : 10 Aug 2016 09:21 AM
Last Updated : 10 Aug 2016 09:21 AM

இந்திய வீரர்கள் சென்றது செல்பி எடுக்கவே; பணத்தையும், வாய்ப்பையும் வீணடிக்கின்றனர்: எழுத்தாளர் ஷோபா டே கடும் தாக்கு

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்கள் சென்றதே செல்பி எடுக்கத் தான் என்று பிரபல கட்டுரை யாளர் ஷோபா டே கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங் களில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.

ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம் வெல்ல முடியாமல் படாதபாடு பட்டு வருகிறது. துப்பாக்கி சுடுதலில் நம்பிக்கை நட்சத்திரமான அபிநவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். ககன் நரங், மனவ்ஜித் சிங், கினான் செனாய், ஹீனா சித்து, அபூர்வி சண்டிலா ஆகியோரும் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்க வேட்டையை பொய்த்து போக செய்தனர்.

டென்னிஸில் ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றோடு இந்தியா வெளியேறியது. வில்வித்தையில் குழு பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதியில் தோல்வியை சந்தித்தது. மேலும் ஒற்றையர் பிரிவில் லட்சுமி ராணி முதல் சுற்றிலேயே வெளியேறினார். டேபிள் டென்னிஸிலும் இந்திய நட்சத்திர வீரர், வீராங்கனைகள் முதல் சுற்றோடு மூட்டை கட்டினர்.

ஹாக்கியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தொடர்ச்சியான வெற்றிகளை குவிக்க முடியாமல் இந்திய அணிகள் தடுமாறி வருகின்றன. நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஷிவானி, சர்ஜன் தகுதி சுற்றிலேயே வெளியேற்றப்பட்டனர். பளு தூக்குதலில் மீரா பாய் சானுவும் தோல்வியை சந்தித்தார்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 4 நாட்கள் ஆன நிலை யிலும் இந்திய அணி இன்னும் ஒரு பதக்கத்தை கூட வெல்ல வில்லை. இந்நிலையில் இந்தியா வின் பிரபல பெண் எழுத்தாளர் ஷோபா டே, தனது ட்விட்டரில், “ஒலிம்பிக்கில் இந்திய அணியின் குறிக்கோள் ரியோ போவது, செல்பி எடுப்பது, பதக்கம் வெல்லா மல் வெறும் கையுடன் திரும்புவது மட்டுமே. பணத்தையும், வாய்ப்பையும் வீணடிக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதிலடி களும் கிடைத்து வருகிறது. பாட் மிண்டனுக்கான, இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கனை ஜூவ்லா கட்டா, உங்களை போன்றோர் நடவடிக்கைகளில் மாற்றம் வரும் போது இந்த நிலைமை மாறலாம் என பதிலடி கொடுத்துள்ளார்.

அபிநவ் பிந்த்ரா தனது ட்விட்டரில், சோபாவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது வீரர், வீராங்கனைகளின் செயல் பாட்டை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

டென்னிஸ் வீரர் சோம்தேவ் வர்மன் தனது ட்விட்டரில், நமது விளையாட்டு வீரர்கள் மேற் கொண்ட கடின வேலைகளை சிறுமைப்படுத்தி பேசுகிறோம் என்பதை ஏன் நீங்கள் யோசிக்க வில்லை என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஹாக்கி கேப்டன் வைரன் ரஸ்குயின்ஹா தனது ட்விட்டரில், ஹாக்கி வீரர்களை போல களத்தில் 60 நிமிடங்கள் ஓடுங்கள், அபிநவ் பிந்த்ரா, ககன் நரங் போன்று துப்பாக்கியை கையில் ஏந்துங்கள் அப்போது தெரியும் கருத்து சொல்வதைவிட அந்த பணிகள் எவ்வளவு கடினமானது என்று" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x