

துபையில் நடைபெற்று வரும் துபை “டியூட்டி ப்ரீ” டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் அய்ஸம் உல் ஹக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போபண்ணா ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-1, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் ரஷியாவின் நிகோலய் டேவிடென்கோ-ருமேனியாவின் விக்டர் ஹனெஸ்கு ஜோடியைத் தோற்கடித்தது.
போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள போபண்ணா-குரேஷி ஜோடி ஒரு மணி நேரம் 28 நிமிடங்களில் காலிறுதிக்கு முந்தைய சுற்றை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் எதிர் ஜோடியின் இரண்டு சர்வீஸ்களை முறியடித்த போபண்ணா ஜோடி, அடுத்த செட்டில் தங்களின் இரு சர்வீஸ்களை எதிர்ஜோடியிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.