Published : 31 Jul 2016 10:26 AM
Last Updated : 31 Jul 2016 10:26 AM

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 தொடர்; திண்டுக்கல் அணியில் களமிறங்குகிறார் அஸ்வின்: கோவை அணிக்கு முரளி விஜய்

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரவிசந்திரன் அஸ்வின் திண்டுக்கல் அணியிலும், முரளி விஜய் கோவை அணியிலும் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், தூத்துக்குடி அணியில் இடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு அளவிலான டி 20 போட்டியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பிரிமியர் லீக் என்று ஐபிஎல் பாணியில் இப்போட்டிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

முதல் சீசனில் தூத்துக்குடி, சேப்பாக்கம் கில்லீஸ், கோவை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், காரைக்குடி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் ரூ. 24 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் 941 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் 8 அணிகளுக்கான வீரர்கள் தேர்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.

மொத்தம் 151 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை அணியை தவிர மற்ற 7 அணிகளும் தலா 19 வீரர் களை தேர்வு செய்தது. கோவை அணி மட்டும் 18 வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரவிசந்திரன் அஸ்வின் திண்டுக்கல் அணியிலும், தினேஷ் கார்த்திக் தூத்துக்குடி அணியிலும், முரளி விஜய் கோவை அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ. 3.40 கோடி ஆகும். சென்னை, நத்தம், திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. பகல் இரவு ஆட்டமாக மொத்தம் 31 போட்டிகள் நடைபெறும்.

இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறும் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சம், 3 மற்றும் 4-வது இடங்களுக்கு தலா ரூ.40 லட்சம், அடுத்த நிலையில் உள்ள 4 அணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.3.40 கோடிக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. அணிகள் விவரம்:

தூத்துக்குடி

தினேஷ்கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் கிறிஸ்ட், அபிநவ் முகுந்த், அவுசிக் னிவாஸ், கவுசிக் காந்தி, பாலாஜி, ஆனந்த் சுப்பிரமணியன், ஆகாஷ் சும்ரா, சத்யநாரயணன், சுஷில், கணேஷ் மூர்த்தி, அதிசயராஜ் டேவிட்சன், மாருதி ராகவ், விஷால், சித்தார்த் அகுஜா, லட்சுமண், நாதன், நிகுல் ஆனந்த்.

சென்னை

சதீஷ், யோமகேஷ், தலைவன் சற்குணம், அந்தோணி தாஸ், கோபிநாத், சாய் கிஷோர், சசிதேவ், ஜோயல் ஜோசப், தமிழ் குமரன், அலெக்ஸாண்டர், வசந்த் சரவணன், ராகுல், அஸ்வத் முகுந்தன், கார்த்திக், ரஜில் அப்துல் ரகுமான், நிர்மல் குமார், வாசு தேவன், ஆதித்யா பாரூக், சிபி ஜவஹர்.

கோயம்புத்தூர்

முரளி விஜய், சையத் முகமது, முகமது, சூர்ய பிரகாஷ், விஜய் சங்கர், சிவகுமார், ரோஹித், விக்னேஷ், அனிருத் சீதாராம், அஜித் ராம், ஹரீஷ் குமார், அக்ஷய் சீனிவாசன், அருண், அன்ஜித், கமலேஷ், தருண் னிவாஸ், ஆதித்யா கிரிதர், கவுதம் தாமரை.

மதுரை

அருண் கார்த்திக், சுரேஷ் குமார், தியாகராஜன், பிரான்சிஸ் ரோகின்ஸ், சந்திரசேகர், விக்னேஷ் கணபதி, ராஜா, ஷிஜித் சந்திரன், விக்னேஷ், மான்கே பாப்னா, முருகானந்தம், அஸ்வின் குமார், அமர்நாத், வருண் நரேந்தர், சக்தி, ஆன்டன் ஆண்ட்ரூ சுபிக்ஸன், மிஹிர், எட்வர்ட் கென்னடி, மது.

காஞ்சிபுரம்

இந்திரஜித், கவுசிக், ஜேசுராஜ், ஷாருக்கான், பரத் சங்கர், பார்த்திபன், வருண் குமார், பிரபு, கவுசிக், கணேஷ், ஆதித்யா கணேஷ், சித்தார்த், சுதேஷ், நிலேஷ் சுப்பிரமணியன், அகில் நாத், பிரதோஷ் ரஞ்சன் பால், மிட்செல் அந்தோணி, திரிலோக் நாக், ஆதித்யா.

திருவள்ளூர்

அபர்ஜித், அபிஷேக் தன்வர், ரஹில் ஷா, கவின், சதுர்வேத், மலோலன் ரங்கராஜன், ரோஹித், ஜகநாத் சீனிவாஸ், விக்னேஷ், சஞ்சய் யாதவ், அருண், சம்ருத்பட், ஹரி நிஷாந்த், லட்சுமிநாராயணன், கோவிந்தராஜ், சிலம்பரசன், முகிலேஷ், சாமுவேல், சந்தோஷ் ஷிவ்.

திண்டுக்கல்

ரவிச்சந்திரன் அஸ்வின், எம்.அஸ்வின், நடராஜன், சஞ்சய், ஜெகதீசன், கங்கை தர் ராஜு, சுப்ரமணிய சிவா, சன்னி குமார் சிங், முகுந்த், வில்கின்ஸ் விக்டர், அஸ்வின் வெங்கட்ராமன், சியாம் சுந்தர், தினேஷ் , யாழ் அருள் மொழி, பிரசாந்த் பிரபு, அபிஷேக், விவேக், ஆதித்யா அருண், சிலம்பரசன்

காரைக்குடி

பத்ரிநாத், அனிருத்தா, சுனில் சாம், சுரேஷ் பாபு, லோகேஸ்வர், கணபதி சந்திரசேகர், சோயிப் கான், விஷால் வைத்யா, சோனு யாதவ், ராஜ்குமார், மோகன் பிரசாத், விஜய் குமார், அபினவ், ஜெரோம், சீனிவாசன், கிரண் ஆகாஷ், சுஜெய், சுவாமிநாதன், ஷாஜகான்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x