காருண்யாவில் விளையாட்டு பிரிவில் மாணவர் சேர்க்கை

காருண்யாவில் விளையாட்டு பிரிவில் மாணவர் சேர்க்கை
Updated on
1 min read

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.ஏ. ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதற்கான தகுதித்தேர்வு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ஏப்ரல் 16, 17 மற்றும் மே 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கபடி, ஹாக்கி, பூப்பந்து, தடகளம் ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்.

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். தகுதித்தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தினை நேரிலோ அல்லது பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலோ (www.karunya.edu) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதித்தேர்வுக்கு வரும் போது உரிய தகுதிச் சான்றிதழ்களைக் கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநரை 0422-2614670, 9487846509, 9894746538 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in