இந்தியா- மே.இந்தியத் தீவுகள் கடைசி டெஸ்டில் இன்று மோதல்

இந்தியா- மே.இந்தியத் தீவுகள் கடைசி டெஸ்டில் இன்று மோதல்
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 237 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. கிங்ஸ்டனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் டிரா ஆனது.

இந்நிலையில் இரு அணிகளும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் மோதுகின்றன. தொடரை ஏற்கெனவே கைப்பற்றி விட்டதால் நெருக்கடி இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது. தொடரை 3-0 என்ற கணக்கில் முடித்து தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பில் விராட் கோலி தீவிரமாக செயல்படக்கூடும்.

3-வது டெஸ்டில் ஒரு நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப் பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர்.

அஸ்வின் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இந்த தொடரில் அவர் இரண்டு சதம் அடித்துள்ளார். 16 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கில் ராகுல், ரஹானே, விராட் கோலி, சாஹா ஆகியோரும், பந்து வீச்சில் முகமது ‌ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர்.

ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி ஏற்கெனவே தொடரை இழந்து விட்டது. இதனால் ஆறுதல் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும்.

நேரம்: இரவு 7.30

ஒளிபரப்பு: டென் 3

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in