தொழில்முறை டி 20 தொடரில் இந்திய வீராங்கனைகள்

தொழில்முறை டி 20 தொடரில் இந்திய வீராங்கனைகள்
Updated on
1 min read

ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து நாடுகளில் நடைபெறும் மகளி ருக்கான டி 20 தொழில்முறை கிரிக் கெட் போட்டியில் இந்திய மகளிரணி கலந்து கொள்ள பிசிசிஐ நேற்று அனுமதி வழங்கியது.

பிசிசிஐ பெண்களுக்கான கிரிக் கெட் கமிட்டி கூட்டம் நடைபெற் றது. இதில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த முடிவால் ஆஸ்தி ரேலியாவில் நடைபெறும் பெண்க ளுக்கான பிக் பாஷ் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் பெண்க ளுக்கான சூப்பர் லீக் தொடரில் இனிமேல் இந்திய வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். ஆனால் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதால் இம்முறை இந்திய வீராங்கனைகளால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

**********

இலங்கை அணியில் புதுமுக வீரர்

இலங்கை கிரிக்கெட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவி இலங்கை அணி தொடரை இழந்தது.

இந்நிலையில் 3-வது போட்டி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அந்த அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா ஷமீராவுக்கு பதிலாக 29 வயது புதுமுக வீரர் சமிந்தா பந்த்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in