

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சீனாவின் புஸாவ் நகரில நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சாய்னா 21-17, 21-17 என்ற நேர் செட்களில் சீனாவைச் சேர்ந்த 17-ம் நிலை வீராங்கனையான லியூ ஸின்னை தோற்கடித்தார்.
இதையடுத்து, சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சாய்னா இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் முதல் செட்டில் சாய்னாவின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. இரண்டாம் செட்டில், இருவரும் சரிநிகர் சமமாக திறம்பட ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், இந்த செட்டிலும் சாய்னா வசப்படுத்தினார்.
இறுதியில், சாய்னா நேவால் 21-12, 22-20 என்ற நேர் செட்களில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.