Last Updated : 24 May, 2017 04:38 PM

 

Published : 24 May 2017 04:38 PM
Last Updated : 24 May 2017 04:38 PM

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்ட ஈடு கோரும் பாகிஸ்தான் வாரியம்: கிரிக்கெட் தொடர் விளையாட நிர்பந்தம்

இந்தியக் கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிசிஐ) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நஷ்ட ஈடு கோரியுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானிடம் கிரிக்கெட் தொடர் விளையாட பிசிசிஐ மறுத்து வருவதால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள், 2014- ம் ஆண்டு ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, பாகிஸ்தானுடன் இந்தியா மொத்தம் 6 கிரிக்கெட் தொடர்களை விளையாட வேண்டும். இதில் 4 தொடர்கள் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தன. ஆனால் 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பிசிசிஐ, பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்து வருகிறது.

ஒப்பந்தப்படி கிரிக்கெட் தொடர் நடைபெறாததால், கிட்டத்தட்ட 449 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாகவும். அதற்குரிய நஷ்ட ஈட்டைத் தர வேண்டும் என்றும் பிசிபி கோரியுள்ளது. இதுகுறித்து விவாதிக்க இரண்டு வாரியங்களின் தலைமை நிர்வாகிகள் மே 29 அன்று சர்வதே கிரிக்கெட் கவுன்சிலில் சந்திக்கவுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், பிசிபி, பிசிசிஐ-க்கு இது தொடர்பான வக்கீல் நோட்டீஸை அனுப்பியிருந்தது. ஆனால் அதை பிசிசிஐ, அது இரு அணிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் மட்டுமே என நிராகரித்தது. தொடர்ந்து, பிசிபியின் தலைவர் ஷாஹர்யார், அது இரு வாரியங்களுக்கும் நடுவில் போடப்பட்ட முறையான ஒப்பந்தம் என பதிலளித்திருந்தார். தொடர்ந்து ஐசிசி-ல் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில், இந்த விஷயம் ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸனின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கும் முடிவு எட்டப்படவில்லையென்றால், பிசிபி இந்த விஷயத்தை ஐசிசியின் சர்ச்சை தீர்மானக் குழுவிடம் எடுத்துச் செல்லும்.

69.4 மில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட 449 கோடி ரூபாய்) நஷ்ட ஈடோடு, 2013வருடம், மிஸ்பா உல் ஹக் தலைமையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடிய ஆட்டங்களுக்கு ஈடாக, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரிலும் இந்தியா விளையாடவேண்டும் என பிசிபி கோரியுள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானிலோ அல்லது இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு மைதானத்திலோ நடக்கும்.

2008 தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மட்டும் இணைந்து ஒரு முழு தொடரில் விளையாடவில்லையென்றாலும், மற்ற சர்வதேச தொடர்களில் விளையாடியுள்ளனர். சமீபத்தில் 2016 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் சந்தித்தது. 2012 டிசம்பர் மாதம், பாகிஸ்தான் அணி இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x