வேண்டுமென்றேதான் இந்தியா-பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் சேர்த்தோம்: ஐசிசி

வேண்டுமென்றேதான் இந்தியா-பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் சேர்த்தோம்: ஐசிசி
Updated on
1 min read

2017ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இது எதேச்சையாக நடைபெற்றது இல்லை என்றும் வேண்டும் என்றேதான் இரு அணிகளையும் ஒரே பிரிவில் சேர்த்துள்ளதாக ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

சமீப காலத்தில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெறுவது இது 5-வது முறையாகும். உலகக் கோப்பைப் போட்டியிலும், டி 20 உலகக் கோப்பைத் தொடரிலும் கூட இரு அணிகளும் ஒரே பிரிவில்தான் இடம் பெற்றிருந்தன.

தற்போது 2017-ல் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பின்ஸ் டிராபி தொடரிலும் கூட இரு அணிகளும் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் 2017-ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறும்போது, "சந்தேகமே வேண்டாம். வேண்டும் என்றேதான் நாங்கள் இரு அணிகளையும் ஒரே பிரிவில் சேர்த்துள்ளோம். இரு அணிகளும் மோதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது.

பெரும் பிரபலம் ஆகிறது. ரசிகர்களும் அதிக அளவில் போட்டியை காண மைதானத்துக்கு வருவார்கள். சர்வதேச அளவில் இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in