

இந்த ஆண்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
டபிள்யூ.டி.ஏ. (மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான வீராங்க னையாக செரீனா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
செரீனா 82 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் 78 போட்டிகளில் அவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். யு.எஸ். ஒபன், பிரெஞ்ச் ஓபன் உள்பட 11 பட்டங்களையும் அவர் வென்றுள் ளார். இந்த ஆண்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக தேர்வு செய்யப் பட்டுள்ளது குறித்து செரீனா செய்தியாளர்களிடம் கூறியது:
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன்மூலம் அடுத்த ஆண்டும் சிறப்பாக அமையும் என்று நம்பு கிறேன். என்னுடைய வெற்றிகளில் நான் மகிழ்ச்சி அடைந்தாலும் தவறுகள் குறித்து அதிகமாக கவனம் செலுத்துகிறேன். என்னு டைய கடந்தகால தவறுகளின் மூலம் பாடம் கற்றுக்கொண்டு அதே தவறை செய்யாமல் இருக்க முயற்சி மேற்கொள்கிறேன் என்றார்.