குஜராத் - பஞ்சாப் இன்று மோதல்

குஜராத் - பஞ்சாப் இன்று மோதல்
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்விகளை பெற்றுள் ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றி, அணியின் தன்னம் பிக்கையை அதிகரிக்க செய்துள் ளது. இந்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா ஆல்ரவுண்டராக அசத்தியிருந்தார்.

பந்து வீச்சில் இரு ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ரெய்னா இந்த சீசனில் 243 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதேபால் 258 ரன்கள் குவித் துள்ள மெக்கலம் தனது அதிரடி யால் அணிக்கு சிறந்த தொடக்கம் அமைத்து கொடுக்கிறார். கொல்கத் தாவுக்கு எதிராக அவரது அதிரடி யால் முதல் 5 ஓவர்களில் 62 ரன்களை குஜராத் அணி குவித்தது. ஆரோன் பின்ச், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகி யோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் பாசில் தம்பி, ஜேம்ஸ் பாக்னர் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் பாசில் தம்பி கடைசி கட்டங்களில் யார்க்கர்கள் வீசி நெருக்கடி கொடுத்தார். இன்றைய ஆட்டத்தில் டுவைன் ஸ்மித் நீக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த இரு ஆட்டத்திலும் அவர் பேட்டிங்கில் சோபிக்க தவறினார். அவருக்கு பதிலாக ஆன்ட்ரூ டை மீண்டும் களமிறங்கக்கூடும்.

பஞ்சாப் அணியும் 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்விகளை பெற்றுள்ளது. இந்த சீசனில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்ற அந்த அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ளது. மும்பை அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஆம்லாவின் சதத்தால் 198 ரன்கள் குவித்த போதும் பஞ்சாப் அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.

மேக்ஸ்வெல் தனது அதிரடி யால் பலம் சேர்க்கிறார். சிறப்பாக விளையாடும் அவர் அதனை பெரிய அளவிலான ரன்குவிப்பாக மாற்ற தவறுகிறார். குஜராத் அணியை போலவே பஞ்சாப் அணியின் பந்து வீச்சும் பலவீனமாக உள்ளது.

இந்திய வீரர்களான மோகித் சர்மா, சந்தீப் சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் ஓவருக்கு 9 ரன்களுக்கு மிகாமல் வாரி வழங்கி உள்ளனர். 3 ஆட்டத்தில் பங்கேற்ற வருண் ஆரோன் 8 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேல் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார். அவர் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் வழங்கி உள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் அதிக மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

இடம்: ராஜ்கோட்

நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in