அஸ்லான் ஷா ஹாக்கி இன்று தொடக்கம்

அஸ்லான் ஷா ஹாக்கி இன்று தொடக்கம்
Updated on
1 min read

மலேசியாவில் இன்று தொடங்கும் 26-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

மே 6-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. இறுதிப் போட்டி மே 6-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டமும் நடத்தப்படுகிறது.

இந்திய அணி இந்த தொடரில் கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்றது. இறுதிப் போட்டியில் 9 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டிருந்தது. இந்த தொடரில் விளையாடிய ஹர்மான்பிரித் சிங், இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்குவகித்தார். தற்போதைய தொடரிலும் அவர் இடம் பிடித்துள்ளது இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் 30-ம் தேதி நியூஸிலாந்தையும், மே 2-ல் ஆஸ்திரேலியாவையும், 3-ம் தேதி ஜப்பானையும், 5-ம் தேதி மலேசியாவையும் எதிர்த்து விளையாடுகிறது.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை தொடரானது ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக லீக் அரை இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராக உதவும் என கருதப்படுகிறது.

மேலும் அடுத்து ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடர், காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்யவும் இந்த தொடர் சிறந்த முறையில் உதவும் என பயிற்சியாளர் ஓல்ட்மான்ஸ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in