Last Updated : 28 Sep, 2016 09:13 AM

 

Published : 28 Sep 2016 09:13 AM
Last Updated : 28 Sep 2016 09:13 AM

ஈடன் கார்டனில் மணியடிக்கும் கபில்தேவ்: டாஸ் போடுவதற்கு தங்க நாணயம்

கொல்கத்தாவில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார்.

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-வது ஆட்டமாகும். இதை யொட்டி இரு அணிகளை கவுரவிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதுதவிர போட்டியை பாரம் பரிய லார்ட்ஸ் மைதானம் போல மணியடித்து தொடங்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டி தினத் தன்று காலை கபில்தேவ், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மணியை அடித்து ஆட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் அவிஷேக் டால்மியா கூறும்போது, ‘‘இந்த யோசனையை கங்குலிதான் கூறினார். போட்டியை மணியடித்து தொடங்கி வைக்க கபில்தேவ் சம்மதம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டி களை மணியடித்து தொடங்கி வைக்கும் பழக்கம் ஏற்படுத்தப் பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரரோ அல்லது நிர்வாகத்தில் உள்ளவர்களோ, விளையாட்டில் பிரபலமான வீரர்களோ இந் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா போட்டிக்காக வெள்ளி முலாம் பூசப்பட்ட பிரேத்யக மணி தயார் செய்யப்பட்டுள்ளது. இதை இன்னும் ஒரு சில நாட்களில் ஈடன் கார்டன் மைதானத்தில் கடிகாரம் உள்ள பகுதியின் அருகே நிறுவன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

போட்டி நாட்களில் தினமும் காலையில் ஒவ்வொரு பிரமுகர் களை கொண்டு மணியடித்து அன் றைய நாள் ஆட்டத்தை தொடங் கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 250-வது போட்டியை யொட்டி இரு அணி வீரர்களும் கவுரப்படுத்தப்பட உள்ளனர்.

போட்டியின் 3-வது நாளின் போது நடைபெறும் பாராட்டு விழா வில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் கலந்துகொண்டு இரு அணி வீரர்களுக்கும் 100 கிராம் எடை யுள்ள வெள்ளி நாணயங்களை நினைவு பரிசுகளாக வழங்க உள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் போட்டியின்போது தங்க நாணயத்தால் டாஸ் போட மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x