ஐஎஸ்எல் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி உரிமம்: சச்சினுடன் இணைந்த சிரஞ்சீவி, நாகார்ஜூனா

ஐஎஸ்எல் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி உரிமம்: சச்சினுடன் இணைந்த சிரஞ்சீவி, நாகார்ஜூனா
Updated on
1 min read

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். இந்நிலையில் அந்த அணியின் இணை உரிமையாளர் களாக பிரபல நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகியோர் இணைந்துள்ள னர். இவர்களுடன் முன்னணி சினிமா தயா ரிப்பாளர் அல்லு அர்விந்த், தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோரும் கேரள அணியின் பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று திருவனந்தரபுரத்தில் நடை பெற் றது. இதில் சச்சின், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா உள்ளிட்ட அணியின் புதிய இணை உரிமையாளர்கள் கலந்து கொண்டு கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் லோகோ மீது கையெழுத்திட்டனர்.

சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, ‘‘நாங்கள் 3-வது சீசன் போட்டியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அணிக்கு பெரிய அளவிலான முதலீட்டாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்த அற்புதமான அனுபவத்துக்கு சிரஞ்சீவி, நாகார்ஜூனா, அல்லு அர்விந்த், நிம்மகட்டா பிரசாத் ஆகியோரை வரவேற்கிறேன். கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை லட்சக்கணக் கான இதயங்கள் பின்பற்றுகின்றன’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in