ஐசிசி மக்கள் தெரிவு விருதுக்கு தோனி, கோலி பரிந்துரை

ஐசிசி மக்கள் தெரிவு விருதுக்கு தோனி, கோலி பரிந்துரை

Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மக்கள் தெரிவு விருதுக்கு, இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஐசிசி கிரிக்கெட் விருதுகள் டிசம்பர் 13-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர்களுக்கான விருது பிரிவில்தான் தோனியும் கோலியும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்தின் குக் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆகியோருடம் இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தங்களது வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு, www.lgiccawards.com வலைத்தளம் அல்லது ட்விட்டர் வழியாக #lgiccawards என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி வாக்களிக்கலாம். கோலி, தோனி ஆகிய இருவரும் ஏற்கெனவே ஐசிசி விருதை வென்றவர்கள். 2012-ல் சிறந்த ஒருநாள் வீரராக கோலியும், 2008 மற்றும் 2009-ல் சிறந்த ஒருநாள் வீரராக தோனியும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in