

கபடி உலகக்கோப்பை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கபில்தேவ் செய்தியாளரின் கேள்வி ஒன்றிற்கு காட்டமாக பதில் அளித்தார்.
அதாவது இந்தியாவில் நடைபெறும் கபடி உலகக்கோப்பையில் பாகிஸ்தன் கலந்து கொள்ளவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கேட்க காட்டமாக பதில் அளித்த கபில்தேவ், “நீங்கள் இந்தியராக இருந்தால் இத்தகைய கேள்வியைக் கேட்கக்கூடாது. இந்தக் கேள்வியைக் கேட்க இதுதான் நேரமா?” என்று கடுப்புடன் பதிலளித்தார்.
கபடி உலகக்கோப்பை அக்டோபர் 7-ம் தேதி முதல் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியின் சீருடை வெளியீட்டு நிகழ்ச்சியில் உலகக்கோப்பை வென்று இந்திய கிரிக்கெட்டுக்கு திருப்பு முனை ஏற்படுத்திய கபில் தேவ் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் பாகிஸ்தான் ஏன் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார். காஷ்மீர் யூரியில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதை மனதில் கொண்டுதான் கபில்தேவ் அந்த நிருபரின் இந்தக் கேள்விக்குக் காட்டமாக பதில் அளித்தார்.