

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலியைக் கடந்து புஜாரா 2-ம் இடத்துக்கு முன்னேறினார். பவுலிங் தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி ஜடேஜா முதலிடம் பிடித்தார்.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் அஸ்வினைக் காட்டிலும் 37 தரவரிசைப் புள்ளிகள் கூடுதலாகப் பெற்றார். அஸ்வின் 2-ம் இடத்திலும் ஹெராத், ஹேசில்வுட், ஆண்டர்சன் ஆகியோர் 3,4,5-ம் இடங்களிலும் உள்ளனர்.
இந்தத் தொடரில் விராட் கோலி வெறும் 46 ரன்களை 9.20 என்ற சராசரியில் எடுத்துள்ளார், ஆனாலும் 4-ம் இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை டாப் 10 வருமாறு:
ஸ்டீவ் ஸ்மித், புஜாரா, ஜோ ரூட், கோலி, வில்லியம்சன், அசார் அலி, யூனிஸ் கான், டேவிட் வார்னர், ஆம்லா, டி காக்.
ஐசிசி பவுலிங் டாப் 10 வீரர்கள்:
ஜடேஜா, அஸ்வின், ஹெராத், ஹேசில்வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட், ஸ்டெய்ன், ரபாடா, பிலாண்டர், நீல் வாக்னர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசை டாப் 5:
ஷாகிப் அல் ஹசன், அஸ்வின், ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க்