

கனடாவில் நடைபெற வின்னிபெக் வின்டர் கிளப் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் பெண்கள் ஸ்குவாஷ் அசோசியேஷன் போட்டியில் தனது முதல் வெற்றியை ஜோஸ்னா பதிவு செய்தார்.இறுதி ஆட்டத்தில் எகிப்தின் ஹேபா இல் டுரோகியை அவர் வென்றார். முன்னதாக இப்போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஹேபாவிடம் ஜோஸ்னா தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வின்னிபெக் ஸ்குவாஷ் சாம்பியன் கோப்பையை இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் தீபிகா பலிக்கல் இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.