டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் 3-வது இடம்

டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் 3-வது இடம்
Updated on
1 min read

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் நேற்று 3-வது இடத்துக்கு அதிரடியாக முன்னேறியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் பாகிஸ்தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

பாகிஸ்தான் 3-வது இடத்தைப் பிடித்ததால் இங்கி லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் ஓரிடம் பின்தங்கிவிட்டன. இங்கிலாந்து 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கும், இலங்கை 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கும், இந்தியா 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கும் சென்றுவிட்டது.

தென்னாப்பிரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொடரை இழந்தபோதிலும் ஆஸ்திரேலியா 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவைவிட சில தரவரிசை புள்ளிகள் மட்டுமே ஆஸ்திரேலியா பின்தங்கி இருந்தது. ஆனால் இப்போது தரவரிசை புள்ளி வேறுபாடு அதிகரித்துவிட்டது. எனவே ஆஸ்திரேலியா முதலிடத்தை எட்டிப்பிடிப்பது இனி கடினம். 2007 ஜனவரிக்குப் பிறகு பாகிஸ்தான் இப்போதுதான் மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in