

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் நடந்த மாநில கூடைப்பந்து போட்டியில் சென்னை ஸ்போர்ட்ஸ் கிளப் அணி கோப்பையை வென்றது. வத்தலகுண்டு யங் ஸ்டார் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், 35-ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, கடந்த 11-ம் தேதி தொடங்கியது.
கடந்த நான்கு நாள்களாக நடைபெற்ற போட்டிகளில் திண்டுக்கல், மதுரை, சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன. இறுதி ஆட்டத்தில் மதுரை தெற்கு மண்டல போலீஸ் அணி, சென்னை ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் விளையாடின. இதில் 61-56 என்றபுள்ளிகள் கணக்கில் சென்னை ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டியில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் அணி, வத்தலகுண்டு யங் ஸ்டார் கூடைப்பந்து அணிகள் மோதின. இதில் திருச்சி மண்டல போலீஸ் அணி வெற்றி பெற்றது.செவ்வாய்க்கிழமை நடந்த பரிசளிப்பு விழாவில் தி.மு.க. இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை யங் ஸ்டார் கூடைப்பந்து கழகச் செயலாளர் போஸ் செய்திருந்தார்.