ஐ லீக் கால்பந்து இன்று தொடக்கம்

ஐ லீக் கால்பந்து இன்று தொடக்கம்
Updated on
1 min read

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற் கும் கால்பந்து தொடர்களில் ஐ லீக் தொடர் மிகவும் முக்கியமானது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் கிளப் அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறும்.

ஆசிய அளவில் நடைபெறும் இந்த போட்டியில் முத்திரை பதிக்கும் அணியானது பிபா சார்பில் நடத்தப்படும் கிளப் அளவிலான சாம்பியன் போட்டியில் விளையாட தகுதி பெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

இதனால் ஐ லீக் கால்பந்து தொடரானது இந்திய கால்பந்து வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஐ லீக் கால்பந்து தொடரின் 10-வது சீசன் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

இந்த தொடரில் சென்னை சிட்டி எப்சி, மும்பை எப்சி, அய்சால் எப்சி, ஷில்லாங் லஜாங் கால்பந்து கிளப், கிங்பிஷர் ஈஸ்ட் பெங்கால், மோகன் பாகன், சிவாஜியன்ஸ் கால்பந்து கிளப், பெங்களூரு கால்பந்து கிளப், மினர்வா பஞ்சாப் எப்சி, சர்ச்சில் பிரதர்ஸ் கிளப் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

இதில் சென்னை சிட்டி எப்சி, மினர்வா பஞ்சாப் எப்சி ஆகிய இரு அணிகளும் இந்த சீசனில் அறிமுக அணிகளாக களமிறங்குகிறது. தொடக்க நாளான இன்று நடப்பு சாம்பியனான பெங்களூரு எப்சி தனது முதல் ஆட்டத்தில் சொந்த மண்ணில், ஷில்லாங் லஜாங் அணியை எதிர்த்து விளையாடுகிறது. மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- அய்சால் எப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை மினவர்வா பஞ்சாப் எப்சி அணியை எதிர்கொள்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in