

ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் 3000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று இந்தியா திரும்பியுள்ள தடகள வீராங் கனை சுதா சிங் காய்ச்சல் காரண மாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இதனால் அவர் ஜிகா வைரஸ்சால் பாதிக்கப்பட்டி ருக்கக்கூடும் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சுதா சிங்கிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சுதாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப் பது தெரியவந்துள்ளதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.