சர்வதேச டி20 கிரிக்கெட்: விடைபெறுகிறார் சங்ககாரா

சர்வதேச டி20 கிரிக்கெட்: விடைபெறுகிறார் சங்ககாரா
Updated on
1 min read

இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியோடு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து விடை பெறுகிறார்.

கொழும்பில் இருந்து வெளி யாகும் இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இந்தத் தகவலை தெரி வித்துள்ளார். இலங்கையின் இளம் வீரர்களுக்கு வழிவிட விரும்பு வதாகத் தெரிவித்துள்ள சங்ககாரா, ஐபிஎல் போன்ற நிறுவனங்கள் சார்ந்த போட்டி களில் தொடர்ந்து விளையாடுவேன் என குறிப் பிட்டுள்ளார்.

இந்த உலகக் கோப்பை போட்டிதான் நான் பங்கேற்கும் கடைசி சர்வதேச இருபது ஓவர் போட்டி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்குப் பிறகு சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் விளையாடமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சங்ககாரா இதுவரை 50 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1,311 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 அரைசதங்கள் அடங்கும். மேலும் அவருடைய தலைமையில் 2009-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற இலங்கை அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in