

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் கேப்ரியானி 206.1 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். உக்கரைனின் ஷெர்ஹி 204.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ரஷ்யாவின் மஸ்லெனிகோவ் 184.2 புள்ளிகளுடன் வெண்கலப்ப தக்கமும் கைப்பற்றினார். அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்றார். இதனால் அபினவ் பிந்த்ரா 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு இந்திய வீரர் ககன் நரங் தகுதி சுற்றோடு வெளியேறினார்.
மகளிருக்கான வில்வித்தை தனிபர் பிரிவில் இந்தியாவின் லட்சுமி ராணி, சுலோவேக்கியாவின் லாங்கோவா அலெக்சாண்ட்ராவை எதிர்த்து விளையாடினார். இதில் லட்சுமி ராணி 1-7 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜெர்மனிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி தோல்வி அடைந்தது. 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது ஜெர்மனி. போட்டி முடிவடைய 3 நொடிகள் இருக்கும் போது ஜெர்மனி இரண்டாவது கோல் அடித்தது.