

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அதிவேக பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெறுவதால் அந்த போட்டிக்கு நேதன் லயன் தேர்வு செய்யப்படக் கூடாது என்கிறார் ஆலன் பார்டர்.
"எந்த வகையான பிட்ச் அளிக்கப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இந்திய வீரர்களுக்கு பழக்கமில்லாத அளவுக்கு பந்துகள் பவுன்ஸ் ஆகும் என்றே நான் கருதுகிறேன்.
ஆகவே நாம் நமது சிறந்த வேகப்பந்து வீரர்களை இந்திய அணியை முடக்க பயன்படுத்த வேண்டும். ஆகவே நேதன் லயன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடாது. மேலும், நேதன் லயன் சரியான ஃபார்மில் இல்லை. பந்தயத்திற்கு ஏற்ற குதிரைதான் தேவை.
நான் இந்திய பேட்ஸ்மெனாக இருந்தால் நேதன் லயன் பந்துகளை எதிர்கொள்ளவே விரும்புவேன். பீட்டர் சிடில், அல்லது ஹேசில்வுட் ஆகியோர் பந்துகளை எதிர்கொள்ள விரும்ப மாட்டேன். அந்த 4-வது வேகப்பந்து வீச்சாளர் யாராக இருந்தாலும் சரி.
மிட்செல் மார்ஷ், ஷேன் வாட்சன் அந்த 4-வது வீச்சாளர் இடத்தை இட்டு நிரப்புவார்கள் என்று என்னிடம் பலரும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் பிரதானமாக பேட்ஸ்மென்கள், கொஞ்சம் பந்து வீசவும் செய்வார்கள் அவ்வளவே” என்று ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றில் ஆலன் பார்டர் கூறியுள்ளார்