

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 6-வது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது. நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் போட்டி தொடங்குகிறது.
ஏற்கெனவே 2 போட்டிகள் மழையால் தடைப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா 2–வது போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது இந்திய அணி. இன்றைய ஆட்டத்தில் வென்றால் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றிவிடும். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.