

வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்தியா ஏ அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளது. இந்த போட்டி பிப்ரவரி 9-ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையா டுவது இதுவே முதன்முறை யாகும். இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக வங்கதேச அணி, இந்தியா ஏ அணிக்கு எதிராக இரு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது.
இந்த பயிற்சி ஆட்டம் பிரப்ரவரி 5 மற்றும் 6-ம் தேதி களில் செகந்திராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடும் 14 பேர் கொண்ட இந்தியா ஏ அணியை, சீனியர் தேர்வுக்குழு வினர் நேற்று தேர்வு செய்தனர். தமிழக வீரர் அபிநவ் முகுந்த் கேப்டனாக தேர்வு செய்யப்பட் டுள்ளார். அணி விவரம்:
அபிநவ் முகுந்த்(கேப்டன்), பிரயங்க் கிர்த் பன்சால், ஸ்ரேயாஷ் ஐயர், இஷாங்க் ஜக்கி, ரிஷப் பன்ட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, சபாஷ் நதீம், ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், அனிகீத் சவுத்ரி, சி.வி.மிலிந்த், நித்தின் ஷைனி.