மும்பைக்கு எதிராக இலானோ உள்ளிட்ட 3 பேர் விளையாட மாட்டார்கள்: சென்னை பயிற்சியாளர் மெட்டாரஸி

மும்பைக்கு எதிராக இலானோ உள்ளிட்ட 3 பேர் விளையாட மாட்டார்கள்: சென்னை பயிற்சியாளர் மெட்டாரஸி
Updated on
1 min read

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியின் மிட்பீல்டர் இலானோ, முன்கள வீரர் மென்டோஸா, மற்றொரு மிட் பீல்டர் கவுரமங்கி ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள் என அந்த அணியின் பயிற்சியாளர் மெட்டாரஸி தெரிவித்தார். ஆனால் அவர்கள் எத்தனை போட்டிகளில் விளை யாடமாட்டார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றார்.

மும்பையில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணியும், சென்னையின் எப்.சி. அணியும் மோதுகின்றன. இந்த நிலையில் மெட்டாரஸி மேலும் கூறியதாவது:

காயமடைந்த 3 பேரும் விளையாடமாட்டார்கள். மற்றபடி கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இந்த ஆட்டத்தில் களமிறங்க தயாராக இருக்கிறார்கள். நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம் அல்லது முன்னேறாமல் போகலாம். ஆனால் நாங்கள் ஓர் அணியாக இருக்கி றோம் என்றார். மும்பை அணி பற்றி பேசிய மெட்டாரஸி, “மும்பை சிறந்த அணி என்பது எங்களுக்குத் தெரியும். நான் ஏற்கெனவே சொன்னது போல ஐஎஸ்எல்லில் மும்பை அணிதான் சிறந்த அணி. ஆனால் நாங்கள் மோசமான அணியல்ல. அதனால் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in