Published : 31 Jan 2014 11:40 AM
Last Updated : 31 Jan 2014 11:40 AM

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - சீன தைபே இன்று மோதல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்குகின்றன. “ஆசியா- ஓசியானியா குரூப்-1’ பிரிவில் சீன தைபே அணியுடன் இந்தியா மோதுகிறது.

சோம்தேவ் தேவ்வர்மன் தலைமையிலான இளம் இந்திய அணி, மிகச்சிறப்பாகவே விளையாடி வருகிறது. இந்தியா வரும் சீன தைபே அணியில் முன்னணி வீரர்கள் யாரும் இல்லை. உலக தரவரிசையில் 54-வது இடத்தில் உள்ள யென் சுன் லு, (154) ஆகியோர் இடம்பெறவில்லை. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி கொரியாவுடன் வரும் ஏப்ரல் 4-ம் தேதி பிளே ஆப் சுற்றில் மோதும்.

இந்தியா தரப்பில் சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நல்ல பார்மில் உள்ள யூகி பாம்ப்ரி இன்று நடைபெறும் ஆட்டத்தில் தைபே-யின் சுங் ஹுவா யாங் (216)கை எதிர்கொள்கிறார். இவர் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் தரவரிசையில் 89வது இடத்தில் உள்ள ஜேக் சோக்கைத் தோற்கடித்தார்.

தரவரிசையில் 103வது இடத்தில் உள்ள சோம்தேவ், டி சென்-ஐ (284) எதிர்கொள்கிறார். சென்-ஐ 2009-ம் ஆண்டு தோற்கடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது. ரோஹன் போபண்மா, அறிமுக வீரர் சகேத் மைனானியுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறார். இந்த ஜோடி, சியென் யின் பெங்- சின் ஹான் லீ ஜோடியை வரும் சனிக்கிழமை எதிர்கொள்கிறது.

ஓற்றையர்(2), இரட்டையர்(1), மாற்று ஒற்றையர்(2) என மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அதிகபட்சமாக மூன்றில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

அணி விவரம்:

சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி, ரோகன் போபண்ணா, சாகேத் மைனேனி.

மாற்று வீரர்கள்: ஜீவன் நெடுஞ்செழியன், சனம் சிங். சிறப்பு அழைப்பாளர் ராம்குமார் ராமநாதன்-பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x