

கான்பூர் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர்கள் அதிக அளவிலான தண்ணீர் இடைவேளை எடுத்துக்கொண்ட தால், இந்திய அணியின் பந்து வீச்சுக்கு இடையூறு ஏற்பட்டதாக பேட்டிங் பயிற்சியாளர் சஞ்ஜய் பங்கார் குற்றம்சாட்டினார்.
இந்தியாவுக்கு எதிரான கான்பூர் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அணி பேட்டிங்கில் பொறுமையான ஆட்டத்தை கையாண்டு வருகி றது. 2-வது விக்கெட்டுக்கு வில்லி யம்சன், டாம் லதாம் ஜோடி 117 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளது.
நேற்றைய 2-வது நாள் ஆட்டத் தின்போது நியூஸிலாந்து வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட பானங்கள் இடை வேளையில் தவிர மேலும் பலமுறை தண்ணீர் இடைவேளை எடுத்துக் கொண்டனர். இந்த இடை வேளைகளின் போது ஏற்பட்ட கால இடைவெளிதான் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடையூறு அளித்ததாக பங்கார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
நாங்கள் இழந்த ஓவர்களின் எண்ணிக்கையை பெற விரும்பி னோம். பந்து சுழலத் தொடங்கிய நிலையில் பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் வீச ஆரம்பித் தனர். ஆனால் மழையால் ஆட்டம் தடைபட்டது.
மேலும் அதிக அளவிலான தண்ணீர் இடைவேளைளும் பந்து வீச்சை பாதித்தது. இதுபோன்ற விஷயத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது சூழ்ச்சி யாக இருந்தால், நாம் ஆலோசிக்க வேண்டும். வரும் நாட்களில் நடுவர்கள் இந்த விஷயத்தில் திருத்தத்தக்க நடவடிக்கையை எடுப்பார்கள் என்பது உறுதி.
கான்பூர் ஆடுகளத்தில் ரன் குவிப்பது என்பது வித்தியாச மானது. நியூஸிலாந்து அணியின் ஒரு விக்கெட் விழுந்தாலும் போட்டியில் இந்தியாவுக்கு சாதகமான அலை திரும்பும். அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் நிச்சயம் தடுமாறுவார்கள்.
2-வது இடைவேளையில் நாங்கள் சிறப்பாகவே பந்து வீசினோம். சுழற்பந்து வீச்சாளர் களும், வேகப்பந்து வீச்சாளர் களும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். விக் கெட்கள் கைப்பற்றும் நிலையை நெருங்கினோம்.
இதனால் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் உருவாக்கினோம். எல்லாமே ஆடுகளத்தின் தன்மை யை பொறுத்துதான் அமையும். நாங்கள் பொறுமையாகவும் அதே வேளையில். சரியான திருப்பு முனைக்காகவும் காத்திருக் கிறோம்.
சுற்றுப்பயணம் மேற்கொள் ளும் ஒவ்வொரு அணியும் திட்டங்கள் வைத்திருக்கும். அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். இந்திய அணியும் ஒரு கட்டத்தில் 150 ரன்கள் வரை ஒரு விக்கெட்தான் இழந்திருந்தது. பந்து தேய ஆரம்பித்ததும் பேட்ஸ் மேன்கள் சற்று சோர்வானார்கள். அப்போதுதான் திருப்புமுனை கிடைக்கும். அந்த சமயத்தில் ஆட்டம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். முரளி விஜய், புஜாரா விளையாடியது போன்றே வில் லியம்சனும் விளையாடி வருகிறார்.
3-வது சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்ற எண்ணமே எங்கள் மனதில் எழவில்லை. தற்போதைய நிலையில் 45 ஓவர்களைதான் வீசியுள்ளோம். அதிலும் பல ஓவர்கள் பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது.
மேலும் இரண்டு நாட்கள் ஆட்டம் மட்டுமே முடிந்துள்ளது. 6 இடைவேளைகள் கூட தாண்டாத நிலையில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்படாதது குறித்த எண்ணமே எங்கள் மனதை கடந்து செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.