

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய கேப்டன் தோனி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழக பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி விலகியிருப்பதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம் பிடித்துள்ளது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது நல்ல வாய்ப்பாகும். இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் மிகவும் ரசித்து விளையாடுகிறேன்” என்றார்.