Published : 19 May 2017 05:11 PM
Last Updated : 19 May 2017 05:11 PM

இந்திய அணியை வீழ்த்துவோம் கோப்பையையும் வெல்வோம்: இன்சமாம் உல் ஹக் உறுதி

முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் நடப்பு தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்துவது மட்டுமல்லாது கோப்பையை வெல்வதும் பாகிஸ்தான் அணியின் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

டான் ஊடகத்தில் இன்சமாம் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு நாங்கள் செல்வது இந்தியாவை வீழ்த்துவதற்காக மட்டுமல்ல, சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே இறுதிக் குறிக்கோள்.

2004-ம் ஆண்டு எனது கேப்டன்சியில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினோம். இந்த முறையும் இதே மைதானத்தில் இந்தியாவை வெல்வோம்.

இவ்வாறு கூறினார் இன்சமாம்.

இன்சமாம் குறிப்பிட்ட இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது இந்திய அணிக்கு கங்குலி கேப்டன், அணியில் சச்சின் டெண்டுல்கர் இல்லை. கங்குலி, சேவாக், லஷ்மண், கயீஃப், யுவராஜ் சிங், திராவிட், ரோஹன் கவாஸ்கர், அஜித் அகார்கர், இர்பான் பத்தான், ஹர்பஜன், நெஹ்ரா ஆகியோர் ஆடினர்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது, சேவாக் 10 ரன்களில் வெளியேற, கங்குலி ரன் எடுக்காமல் காலியானார். ராகுல் திராவிட் அதிகபட்சமாக 67 ரன்களையும், அஜித் அகார்க்கர் 47 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி 200 ரன்களுக்குச் சுருண்டது. ஷோயப் அக்தர் 4 விக்கெட்டுகளையும், நவேத் உல் ஹசன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 27/3 என்று தடுமாறியது, 3 விக்கெட்டுகளையும் இர்பான் பத்தான் வீழ்த்தினார். ஆனால் அதன் பிறகு இன்சமாம் 41 ரன்களையும், யூசுப் யுஹானா (பிற்பாடு மொகமது யூசுப்) 81 ரன்களையும் சேர்க்க 49.2 ஓவர்களில் 201/7 என்று பாகிஸ்தான் போராடியே வெற்றி பெற்றது.

இதைத்தான் இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x