

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-4 என படுதோல்வி யடைந்த இங்கிலாந்து அணி கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத் துக்கு பிறகு 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடு வதற்காக திரும்பி வந்துள்ளது.
குறுகிய வடிவிலான இந்த இரு தொடர்களையும் இங்கிலாந்து அணி மோர்கன் தலைமையில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 15-ம் தேதி புனே வில் நடைபெறுகிறது. முன்னதாக இங்கிலாந்து அணி, இந்தியா ஏ அணிக்கு எதிரான இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது.
இந்த ஆட்டங்கள் மும்பை பிரா போர்ன் மைதானத்தில் வரும் 10 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறு கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் மோர்கன் தலைமை யில் நேற்று மும்பையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் வரை இந்த பயிற்சி நடைபெற்றது.
இதில் முன்னணி வீரரான ஜோ ரூட் கலந்துகொள்ளவில்லை. அவர் 12-ம் தேதிதான் இந்தியா வந்து சேருவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதி ரான தொடரை இந்திய அணி விராட் கோலி தலைமையில் எதிர்கொள் கிறது. விக்கெட் கீப்பராக அணியில் நீடிக்கும் தோனி பயிற்சி போட்டி யில் இந்தியா ஏ அணியில் விளை யாடுகிறார். ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்:
மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், ஜாஸ் பட்லர், லயிம் டாவ்சன், அலெக்ஸ் ஹெல்ஸ், ஜேக் பால், சேம் பில்லிங்ஸ், லயிம் பிளங்கெட், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்.