Published : 07 Jun 2016 03:23 PM
Last Updated : 07 Jun 2016 03:23 PM

இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி விண்ணப்பம்

சந்தீப் பாட்டீலைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு ரவி சாஸ்திரியும் விண்ணப்பித்துள்ளார்.

இது குறித்து ரவி சாஸ்திரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “என்னுடைய விண்ணப்பத்தை கிரிக்கெட் வாரியத்துக்கு மின்னஞ்சல் செய்தேன்” என்று கூறினார்.

அதாவது 2019 உலகக்கோப்பை போட்டிகள் வரையிலான தனது திட்டங்களை வகுத்து ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

டெஸ்ட் கேப்டன் விராட் கோலியுடன் பெரிய அளவில் நெருக்கமான ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்திருப்பதால் இவருக்கு இந்த பொறுப்பு கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இவருக்கும் பாட்டீலுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் முன்னாள் அணி மேலாளர் லால்சந்த் ராஜ்புத், முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் இந்தியா ஏ பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரே ஆகியோரும் தங்கள் விண்ணப்பங்களை அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர இன்னும் சில உள்நாட்டு வீரர்களும் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x