

பிரபல டென்னிஸ் வீராங் கனையான அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக இருப்பதை அவரது செய்தி தொடர்பாளர் புஷ் நோவாக் உறுதிப்படுத்தி உள்ளார்.
35 வயதான செரீனா வில்லியம்ஸூக்கும் ரெட்டிட் சமூக வலைத் தளத்தின் துணை நிறு வனரான அலெக்ஸிஸ் ஒஹானியனுக்கும் (33) கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந் நிலையில் தான், 20 வார கர்ப்பமாக இருப்ப தாக சமூக வலைத்தளங் களில் புகைப்படத்துடன் கூடிய தகவலை செரீனா வெளியிட்டார். ஆனால் திடீரென அந்த படத்தை செரீனை நீக்கினார்.
இந்நிலையில் செரீனாவின் செய்தி தொடர்பாளர் கெல்லி புஷ் நோவாக், செரீனா கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக புஷ் நோவாக் கூறும்போது, “ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகு செரீனா எந்த தொடரிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த வருடம் நடைபெறும் எந்த போட்டியிலும் அவர் விளையாட மாட்டார். 2018-ல் அவர் மீண்டும் களமிறங்குவார்” என்றார்.
கடைசியாக செரீனா கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் தனது சகோதரியான வீனஸை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தார். தற்போது செரீனா 5 மாத கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அப்படியனால் அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் போது 3 மாத கர்ப்பத்தில் இருந்துள்ளார் என்றே கருதப்பட வேண்டியதுள்ளது. அந்த நிலையிலும் அவர் பட்டம் வென்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.