சாம்பியன்ஸ் டிராபியில் கிறிஸ் வோக்ஸ் விலகல்

சாம்பியன்ஸ் டிராபியில் கிறிஸ் வோக்ஸ் விலகல்
Updated on
1 min read

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விலகி உள்ளார்.

28 வயதான அவர், நேற்று முன்தினம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது 2 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர் அதன் பின்னர் களமிறங்க வில்லை.

ஸ்கேன் செய்து பார்க்கப் பட்டதில் கிறிஸ்வோக்ஸூக்கு இடது பக்க தொடை பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மாற்று வீரர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அநேக மாக ஸ்டீவன் பின் அல்லது டுபி ரோலன்ட் ஜோன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்ப டுக்கூடும் என தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி தனது 2-வது ஆட்டத்தில் வரும் 6-ம் தேதி நியூஸிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in