

மலேசியன் ஓபன் சீரிஸ் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தமது முதல் சுற்றில், இந்தோனேஷியாவின் ஹீரா தேசியை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் சாய்னா 21-10, 21-16 என்ற நேர் செட்களில் ஹீராவை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் பி.வி.சிந்து 21-17, 21-18 என்ற செட்களில் இந்தோனேஷியாவின் லிண்டாவேனியை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
அதேநேரத்தில், ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் ஆனந்த் பவார் 12-21, 11-21 என்ற செட்களில் சீனாவின் வாங் ஜெங் மிங்கிடம் தோல்வியடைந்தார்.