Published : 26 Apr 2017 10:03 AM
Last Updated : 26 Apr 2017 10:03 AM

பாகிஸ்தான் 407 ரன் குவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடை பெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. மிஸ்பா உல்-ஹக் 5, ஆசாத் ஷபிக் 5 ரன்களுடன் 4-வது நாள் ஆட்டடத்தை தொடர்ந்து விளையாடினார்கள். ஆசாத் ஷபிக் 22, சர்ப்ராஸ் அகமது 54, முகமது அமீர் 11, வகாப் ரியாஸ் 9, யாசிர் ஷா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மிஸ்பா 99 ரன்கள் சேர்த்து களத்தில் நின்ற நிலையில் கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது அபாஸ் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முடிவில் பாகிஸ்தான் 138.4 ஓவர்களில் 407 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 28 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x