

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அஜர்பைசானின் கபாலா நகரில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் சர்வதேச துப்பாக்கிக் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் வீரர்கள் பங்கேற்றனர். இதில் 50 மீட்டர் புரோன் ரைபிள் பிரிவில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர் அஜய் நிதீஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதே பிரிவில் மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கலைக்கல்லூரி மாணவர் சர்வேஜ் சொருத் சங்கர் வெண்கலம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற இருவரும் நாளை மதுரைக்கு வருகின்றனர். பதக்கம் வென்ற வீரர் களுக்கு அவர்களது கல்வி நிறுவ னங்கள், பாராட்டு தெரிவித்துள்ளன.