

உச்ச நீதிமன்ற ஆலோசனையின் படி பிசிசிஐ இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.
இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை பிசிசிஐ தற்காலிக தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கவாஸ்கர், "உச்ச நீதிமன்ற ஆலோசனை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆலோசனையின் படி பிசிசிஐ இடைக்கால் தலைவர் பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறேன். உச்சநீதிமன்றமே அணுகும் போது, அதில் கேள்வியெழுப்புவது சரியானது இருக்காது" என்றார்.
பிசிசிஐ இடைக்கால தலைவர் பதவியின் சவால்களை சந்திக்க தயாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கும். அவை அனைத்தையும் சாமர்த்தியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.