Published : 24 Jun 2016 05:08 PM
Last Updated : 24 Jun 2016 05:08 PM

முதன் முதலாக ஆஸி. பிக்பாஷ் டி20 லீகில் ஆடும் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர்

அயல்நாட்டு டி20 லீக் ஒன்றில் முதன் முதலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனையானார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் மகளிர் சுற்று டி20 லீகில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர்-ஜனவரியில் நடைபெறும் டி20 பிக்பாஷ் லீகில் இந்திய ரசிகர்கள் ஹர்மன்ப்ரீத் கவுரின் ஆட்டத்தைக் கண்டு களிக்கலாம்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் அயல்நாட்டு டி20 லீகுகளில் விளையாட பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

ஆல்ரவுண்டரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவருமான ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சிட்னி சிக்சர்ஸ் அணி உட்பட 3 அணிகளிடமிருந்து வாய்ப்ப்பு வந்தது.

ஆனால் சிட்னி தண்டர் அணிக்கு தற்போது இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், இது குறித்து சிட்னி தண்டர் அணி கேப்டன் கூறும்போது, “இந்திய அணியில் சில சுறுசுறுப்பான வீராங்கனைகள் இருப்பதை நாங்கள் அடையாளம் கண்டோம். வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் தனித்து நிற்கின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x