சென்னை ஓபன் டென்னிஸ்: பவுதிஸ்டா அகுட் சாம்பியன்

சென்னை ஓபன் டென்னிஸ்: பவுதிஸ்டா அகுட் சாம்பியன்
Updated on
1 min read

தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் நேற்று உலக தரவரிசையில் 14-வது இடமும் போட்டி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுதிஸ்டா அகுட், 99-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மேட்வேதேவ்வை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் அகுட் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

அகுட் கடைசியாக 2013-ல் சென்னை ஓபனில் இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தார். இம்முறை சிறப்பாக செயல்பட்ட அவர் பட்டம் வென்று அசத்தினார். அகுட் ஒற்றையர் பிரிவில் வெல்லும் 5-வது பட்டம் இதுவாகும். வெற்றிப் பெற்றவருக்கு ரூ.55 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-3, 6-4 என்ற செட்கணக்கில் மற்றொரு இந்திய ஜோடியான பூரவ் ராஜா - திவிஜ் சரணை வீழ்த்தி பட்டம் வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in