

பிரபல கால்பந்து வீரரான பிரான் ஸின் பால் போக்பாவை மான் செஸ்டர் யுனைடெட் அணி ரூ.740 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜோஸ் மோரின்ஹோ பொறுப் பேற்ற பின், ஸ்வீடன் அணி யின் முன்னாள் கேப்டன் ஸ்லாட் டன் இப்ராஹிம்விச்சை ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து இத்தாலி யின் யுவான்டஸ் அணி வீரர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வந்தது. தற்போது யுவான்டஸ் அணியுடன் பேரம் படிந்துள்ளது. அதன்படி, 89 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.740 கோடி) பால் போக் பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம், உலகிலேயே அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெருமையை 23 வயது பால் போக்பா பெறுகிறார். கடந்த 2013-ம் ஆண்டு, டாட்டன்ஹாம் அணிக்காக விளையாடி வந்த காரத் பேலை, ரியல்மாட்ரிட் அணி ரூ.700 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. கால்பந்து உலகில் அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமை காரத் பேல் வசமே இருந்தது. தற்போது அதனை பால்போக்பா முறியடித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு பால் போக்பா மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகத்தான் விளையாடி வந்தார். பின்னர் யுவான்டஸ் அணி யில் இணைந்தார். பால்போக்பா யுவான்டஸ் அணிக்காக விளை யாடிய 4 சீசன்களிலும் யுவான் டஸ் அணி இத்தாலி சீரி ‘ஏ' கோப் பையை தொடர்ந்து கைப்பற்றி யது. கடந்த 2015-ம் ஆண்டு, சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத் துக்கும் முன்னேறியது. யுவான் டஸ் அணிக்காக பால் போக்பா, 4 சீசன்களில் 178 ஆட்டங்களில் விளையாடி 34 கோல்களை அடித் துள்ளார்.