

பிசிசிஐ-யின் தற்போதைய செயலாளர் அஜய் ஷிர்கே, மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள் ளார்.
பிசிசிஐ-யின் 87-வது ஆண்டுப் பொதுக் குழு மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் செயலாளர் பதவிக்கான தேர்தலில் 62 வயதான அஜய் ஷிர்கே போட்டியின்றித் தேர்வா னார். ஐசிசி தலைவர் பதவிக்காக பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகியதை அடுத்து, பிசிசிஐ செயலராக இருந்த அனுராக் தாக்குர் அதன் தலைவரானார்.
இதையடுத்து அஜய் ஷிர்கே கடந்த ஜூலை மாதம் பிசிசிஐ செயலாளராக நியமிக்கப்பட் டார். தற்போது மீண்டும் பிசிசிஐ செயலாளராக அவர் தேர்வாகி யுள்ளார். ஷிர்கே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.