ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆவலாக இருக்கிறேன்: பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உற்சாகம்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆவலாக இருக்கிறேன்: பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உற்சாகம்
Updated on
1 min read

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆவலாக இருக்கிறேன் என்று பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய பாட்மிண்டன் அணி நாளை ரியோ நகருக்கு புறப்பட்டுச் செல்கிறது. இந்நிலையில் இந்த அணியில் இடம்பெற்றுள்ள பி.வி.சிந்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இந்த ஒலிம்பிக் போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு நாம் எப்படி தயாரா கிறோம் என்பதைப் பொறுத்தும், போட்டியின் ஒவ்வொரு தருணத் தையும் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்தும்தான் வெற்றி - தோல்வி அமையும். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு எங்களைத் தயார் படுத்திக்கொள்ள பாட்மிண்டன் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே நாங்கள் ரியோ நகருக்குச் செல்கிறோம். போட்டி நடக்கும் மைதானத்தில் ஆடி பயிற்சி பெறவுள்ளோம்.

இதில் கலந்துகொள்ளும் பல வீராங்கனைகளை நான் ஏற்கெனவே போட்டிகளில் சந்தித்துள்ளேன். அது எனக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. ஒலிம்பிக் போட்டியின் லீக் சுற்றில் காமன்வெல்த் சாம்பியனான மிச்செல் லீ இடம்பெற்றுள்ள பிரிவில் நான் ஆடவுள்ளேன். அவருடனான ஆட்டம் சவால் மிகுந்ததாக இருக்கும்.

இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in