Published : 12 Nov 2014 11:11 AM
Last Updated : 12 Nov 2014 11:11 AM

262 ரன்களில் சுருண்டது நியூஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 87.3 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 170.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் லேத்தம் 103 ரன்கள் குவித்தபோதும் எஞ்சிய வீரர்கள் வேகமாக வெளியேறியதால் 87.3 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் ரஹத் அலி 4 விக்கெட்டுகளையும், ஜல்பிகர் பாபர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் முன்னிலை பெற்றபோதும் பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது. ஹபீஸ் 5, அசார் அலி 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x