ஹாக்கி போட்டியில் கனடாவிடம் இந்தியா தோல்வி

ஹாக்கி போட்டியில் கனடாவிடம் இந்தியா தோல்வி
Updated on
1 min read

உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரில் 5 முதல் 8-வது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் இந்திய அணி நேற்று கனடாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்களை அடித்தார். கனடா அணிக்காக ஜான்ஸ்டன் 2 கோல்களையும், கீகன் ஒரு கோலையும் அடித்தனர். இப்போட்டியில் கோல் அடிப்பதற்காக கிடைத்த 10 பெனாலிடி கார்னர் உட்பட 22 வாய்ப்புகளை இந்திய அணி வீணடித்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

கனடாவிடம் அடைந்த தோல் வியைத் தொடர்ந்து இப்போட்டித் தொடரில் இந்திய அணி 6-வது இடத்தை பிடித்தது. கனடா அணிக்கு 5-வது இடம் கிடைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in