

மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் ஜூனியர், சீனியர் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 102 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் 53 தங்கப் பதக்கங்களும் அடங்கும்.
மலேசியாவின் பெனாங் நகரில் காமன்வெல்த் ஜூனியர், சீனியர் பளுதூக்கும் போட்டி கடந்த 24-ம் தேதி தொடங்கியது. கடந்த 7 நாள்களாக நடைபெற்ற இப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன.
இந்தப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 102 பதக்கங்களை வென்றனர். இதில் 53 தங்கப் பதக்கங்களும் அடங்கும்.
அதிகபட்சமாக இந்திய ஜூனியர் அணி வீரர்கள் 24 பதக்கங்களை வென்றனர். இதில் 16 தங்கப் பதக்கங்கள் ஆகும்.
அவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்திய ஜூனியர் அணி வீராங்கனைகள் 21 பதக்கங்களை வென்றனர். இதில் 12 தங்கப் பதக்கங்கள் ஆகும்.
இந்திய சீனியர் அணி வீரர், வீராங்கனைகள் 9 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றனர்.