

மலேஷிய மாஸ்டர்ஸ் கோப்பைக் கான பாட்மிண்டன் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் பட்டம் வெல்லும் குறிக்கோளுடன் சாய்னா நெவால் களம் இறங்குகிறார்.
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவால் கடந்த ஆண்டு பெரும் சரிவை சந்தித்தார். ஒலிம்பிக் போட்டியின்போது காயம் அடைந்த அவர் அதைத்தொடர்ந்து சில காலம் பாட்மிண்டன் போட்டி களில் இருந்து விலகி இருக்க நேர்ந்தது. அதன் பிறகு பாட் மிண்டன் போட்டிகளில் ஆடினா லும் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பிரீமியர் பாட்மிண்டன் லீகில் 3 ஆட்டங் களில் வெற்றிபெற்ற அவர் பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மலேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நெவால் கலந்துகொள்கிறார்.முன்னணி வீராங்கனைகள் பலரும் கலந்து கொள்ளாத நிலையில் இப்போட்டி யில் பட்டம் வென்று, மீண்டும் தன் வெற்றிப்பயணத்தை தொடங்கும் எண்ணத்துடன் சாய்னா நெவால் களம் இறங்குகிறார். இப்போட்டி யில் ரிதுபர்ணா தாஸ், ஸ்ரீகிருஷ்ண பிரியா ஆகியோரும் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ஆடுகிறார்கள்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஜய் ஜெயராம், ஹர்ஷீல் டானி, அபிஷேக் யெலேகார், ராகுல் யாதவ் ஆகியோர் இந்தியாவின் சார்பில் களம் இறங்குகிறார்கள்.